Saturday, March 16, 2024
மேலும்
    Homeஅறிவியல்நிலவில் 800 கோடி மனிதர்கள்... நாசா வெளியிட்ட ஆச்சரியமூட்டும் தகவல்

    நிலவில் 800 கோடி மனிதர்கள்… நாசா வெளியிட்ட ஆச்சரியமூட்டும் தகவல்

    நிலவில் 800 கோடி மனிதர்கள், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்சிஜன் இருப்பதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. நிலவில் மனிதர்களை குடியேற்ற பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.

    உலகின் முக்கிய மற்றும் பெரிய நாடுகள் இதில் பெரும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றன. இதற்காக பல கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்படுகின்றன.

    இந்த நிலையில், நிலவில் 800 கோடி மனிதர்கள், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஆண்டுகள் வாழ தேவையான ஆக்ஸிஜன் இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

    நிலவின் மேற்பரப்பில் சிலிகா, அலுமினியம், மெக்னீசியம் ஆக்சைடுகள், இரும்பு போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளதாகவும், இந்த தாதுக்கள் அனைத்தும் ஆக்ஸிஜனை உள்ளடக்கியது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    ரிக்கோலித் எனப்படும் நிலவின் மேற்பரப்பில், 1.4 டன் கனிமங்கள் உள்ளன. இதில் ஒரு கன மீட்டருக்கு சுமார் 630 கிலோமீட்டர் ஆக்சிஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் கூற்றுப்படி, ஒருவர் ஒரு நாளைக்கு சுவாசிக்க சுமார் 800 கிராம் ஆக்சிஜன் தேவை.

    அப்படி என்று பார்த்தால், நிலவில் உள்ள ஆக்சிஜன் மூலம் அங்கு மனிதர்கள் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு வாழலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....