Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவடிவேலு பட பாணியில் 'அரசு மருத்துவமனையை காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

    வடிவேலு பட பாணியில் ‘அரசு மருத்துவமனையை காணவில்லை’ என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

    அரசு மருத்துமனையை காணவில்லை என கரூரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

    கரூர் மாவட்டம், குளித்தலையில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. குளித்தலை, தோகைமலை, நங்கவரம், லாலாபேட்டை, பழைய ஜெயங்கொண்டம், பஞ்சப்பட்டி, அய்யர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கரூர், காந்தி கிராமத்தில், மருத்துவக் கல்லூரி உள்ளதால் அரசு மருத்துமனையை, மாவட்ட அரசு  தலைமை மருத்துவமனையாக உயர்த்துவதாக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    அந்த போஸ்டரில், காணவில்லை தமிழக அரசே! கண்டுபிடித்து கொடு! குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை. திருடி சென்றவர்களை கண்டுபிடித்து, சட்ட பூர்வமான நடவடிக்கை எடுத்து, எங்கள் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை குளித்தலை மக்களிடம் ஒப்படைத்திடு! என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ஒரே நேரத்தில் ட்ரெண்டான ”ரஜினி – கமல்” புகைப்படங்கள்.. ஜெயிலர், இந்தியன் 2 லேட்டஸ்ட் அப்டேட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....