Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்புதுச்சேரிகத்தியை காட்டி பணம் பறித்த இளைஞர்; அதிரடி காண்பித்த காவல்துறை!

    கத்தியை காட்டி பணம் பறித்த இளைஞர்; அதிரடி காண்பித்த காவல்துறை!

    புதுச்சேரிக்கு பொருட்கள் வாங்க வந்த அண்ணன், தம்பியை கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த தனியார் பேருந்து ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

    திருவண்ணாமாலை மாவட்டம் செய்யாறு தாலுகா புளியரம்பாக்கத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 30). தனியார் நிறுவன ஊழியரான இவர் வீட்டுக்கு தேவையான மின்சார வயர்கள் வாங்க தனது சகோதரன் தீரன் என்பவருடன் புதுச்சேரி வந்தார்.

    ஆனால், அவர்களை வரச்சொன்ன எலக்ட்ரீசியன் ரமேஷ் வராததால் இரவில் ஊருக்கு திரும்ப புதிய பஸ்நிலையம் வந்தனர். அவர்கள் பஸ்நிலைய மேம்பாலத்தில் ஏறி சென்றபோது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் கணபதியிடம், அவசரமாக பேசவேண்டும் உங்கள் செல்போனை கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

    அதை நம்பி கணபதியும் செல்போனை கொடுத்துள்ளார். அந்த நபர் செல்போனில் பேசியபடி வேகமாக நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்த கணபதியும் செல்போனை கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர் மது வாங்கி தந்தால்தான் செல்போனை தருவேன் என்று கூறிவிட்டார். இதனால் வேறு வழியின்றி கணபதியும் அதற்கு சம்மதித்தார்.

    ஆனால், அந்த நேரத்தில் மதுக்கடைகள் மூடியிருந்ததால் வேறு ஒரு இடத்தில் மது கிடைக்கும் என்று கூறி அந்த நபர் அவர்களை இந்திராகாந்தி சிலை நோக்கி அழைத்து சென்றுள்ளார். அப்போது தீரன் தனக்கு கால் வலிக்குது என்று கூறி அமர்ந்து விட்டார். கணபதி மட்டும் அந்த நபருடன் சென்றார். இந்திராகாந்தி சிலை அருகே இருட்டான பகுதிக்கு அழைத்து சென்ற அந்த நபர், திடீரென கத்தியை காட்டி கணபதியை மிரட்டி அருகில் கிடந்த கட்டையை எடுத்து தலையில் தாக்கினார்.

    பின்னர் கணபதி வைத்திருந்த ரூ.9 ஆயிரத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டார். இதுதொடர்பாக கணபதி உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    மேலும், பஸ் நிலைய பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது கண்டமங்கலத்தை சேர்ந்த தனியார் பஸ் ஊழியரான (கிளீனர்) விக்னேஷ்வர் (22) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....