Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஒரு வருடத்துக்குப் பிறகு திரையரங்குகள் திறக்க அனுமதித்த தலிபான்கள்.. மகிழ்ச்சி தான் ஆனால்?

    ஒரு வருடத்துக்குப் பிறகு திரையரங்குகள் திறக்க அனுமதித்த தலிபான்கள்.. மகிழ்ச்சி தான் ஆனால்?

    ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பின்னர் சினிமா திரையரங்குகளை திறக்க தலிபான்கள் அனுமதி கொடுத்துள்ளனர். 

    தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி ஓராண்டை கடந்துள்ளது.  இந்நிலையில், அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பெண்களுக்கும், அந்நாட்டுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். 

    ஆப்கானிஸ்தானில், தேவையில்லாமல் பெண்கள் வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்றனர். மேலும், பெண்கள் மேல்நிலை கல்வி கற்பதற்கு தடை விதித்தது பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதித்துள்ளனர். பெண்கள் நலத்துறை அமைச்சகத்தையும் தலிபான்கள் மாற்றிவிட்டனர். 

    மேலும், பல பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கும் ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒராண்டாக மூடப்பட்டிருந்த சினிமா திரையரங்குகளை திறக்க தலிபான்கள் அனுமதி கொடுத்துள்ளனர். 

    இந்நிகழ்வுக்கு பலர் மகிழ்ச்சி தெரிவித்தாலும், அதில் பெண்களின் நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். 37 படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் திரையிட தயாராக இருந்தாலும், அதில் அதிபா முகமதி என்ற ஒரே பெண் மட்டுமே அனைத்து படங்களிலும் நடித்துள்ளார்.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....