Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்லிப்ட் விவகாரம்; அமைச்சர்னா பணி நீக்கம்? அப்ப பொதுமக்கள்னா?

    லிப்ட் விவகாரம்; அமைச்சர்னா பணி நீக்கம்? அப்ப பொதுமக்கள்னா?

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், மின்தூக்கிகளை (Lifts) சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்களை பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு,  மருத்துவம்மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்ரமணியன்  பங்கேற்க 29.11.2022 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றார்.

    மின்தூக்கியில் அமைச்சருடன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் சிலர் உடன் சென்றுள்ளனர்.மின்தூக்கியில் செல்லும்போது, மின்தூக்கியை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பழுதடைந்து பாதி வழியிலேயே  நின்று விட்டது. இது தொடர்பாக  அமைச்சர், மருத்துவமனையில் நோயாளிகளிடம் விசாரித்த வகையில் இது போன்று அடிக்கடி மின்தூக்கி (Lift) பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் டி.சசிந்தரன், மற்றும் உதவிப் பொறியாளர் திருமதி.வி.கலைவாணி ஆகிய இருவரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், முதன்மைத் தலைமைப் பொறியாளர் பொதுப்பணித்துறை அவர்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்று நிகழ்வுகளை தவிர்க்கும் பொருட்டு, விரிவான சுற்றறிக்கை ஒன்றினை, 25.11.2022 அன்று அனைத்து மின் பொறியாளர்களுக்கும் அனுப்பியுள்ளார்.

    அதில், மருத்துவமனைகளில் உள்ள மின்தூக்கிகள் (Lifts) மற்றும் இதர மின் சாதனங்கள் சரியாக இயங்குவதை சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இச்சுற்றறிக்கையில் அறிவுறுத்தியுள்ளார்கள்.

    அரசியலமைப்பு சட்டத்தின் படி செயல்பட வேண்டும் என்பதை உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும்; டிகேஎஸ் இளங்கோவன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....