Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

    தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரியா படத்திற்க்கு அஞ்சலி செலுத்தி, 10 லட்ச ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார்.

    சென்னை வியாசர்பாடி சேர்ந்த கால் பந்தாட்ட வீராங்கனை பிரியா கால்பந்தாடும் பொழுது ஏற்பட்ட காயத்தின் காரணமாக அரசு மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்திருந்தார். இந்த அறுவை சிகிச்சையின் இறுதியில் ரத்த நாளம் பாதிக்கபட்டு மருத்துவர்களின் அலச்சியத்தால் பிரியா கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்நிலையில் இன்று வியாசர்பாடியில் உள்ள கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று பிரியாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் பிரியாவின் தந்தையிடம் பிரியாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன் என்று கூறிய முதலமைச்சர், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ப்ரியாவின் தந்தையிடம் வழங்கினார்.

    மேலும் பிரியாவின் அண்ணனுக்கு மருத்துவத் துறையில் அரசு வேலைக்கான ஆணை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையத்தில் ஒரு வீடு ஒன்றையும் பிரியாவின் குடும்பத்திற்கு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினையும்
    தமிழக முதலமைச்சர் வழங்கினார்.

    இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்

    கால்பந்தாட்ட வீராங்கனை ப்ரியாவின் மரணம் தாங்க முடியாத துயரம்!

    ஏற்றமிகு உயரத்தை எட்டவிருந்த திறமைசாலியான அவரது இழப்பு, அவரது குடும்பத்துக்கும் – நம் மாநில விளையாட்டுத்துறைக்கும் ஏற்பட்ட மாபெரும் இழப்பு!

     

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்க்கு அரசு அனைத்து வழிகளிலும் உதவியாய் நிற்கும். இவை அனைத்தும் ப்ரியாவின் உயிர்க்கு ஈடாகாது.

    என்று உருக்கமான பதிவினையும் போட்டுள்ளார்.

    இதையும் படிங்கபி.ஆர்.டி.சி யில் 10 வருட அரியர் தொகையை வழங்க கோரி தனி நபராக நூதன போராட்டம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....