Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்; ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

    பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர்; ஜாமின் வழங்கிய நீதிமன்றம்

    பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. 

    2022-ஆம் ஆண்டிற்கான இருபது ஓவர் உலகக் கோப்பை தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இலங்கை வீரர் ஒருவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    கடந்த 2-ஆம் தேதி 29 வயதான பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனுஷ்கா குணதிலகா மீது புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, இலங்கை அணியின் வீரர் தனுஷ்கா குணதிலகாவை பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக சிட்னி காவல்துறையினர் கைது செய்தனர்.

    இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறாததால், அந்த அணியினர் அனைவரும் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பினர். தனுஷ்கா குணதிலகா கைதாகியுள்ளதால், அவர் மட்டுமின்றி இலங்கை அணி நாடு திரும்பியது. 

    இதையும் படிங்ககால்பந்து உலகக் கோப்பை – விடாது துரத்தும் சர்ச்சையிலும் 220 பில்லியன் டாலர் செலவு செய்த கத்தார்..

    இதைத்தொடர்ந்து, பாலியல் புகாரில் கைதான தனுஷ்கா மீதான புகார் தற்போது நிரூபனமாகியுள்ளதால், தனுஷ்கா குணதிலகா ஜனவரி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தனுஷ்கா குணதிலகா முறையிட்ட ஜாமீன் மனுவை அந்நாட்டின் பாரமட்டா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தனுஷ்கா குணதிலகா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஈடுபட இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. 

    இந்நிலையில், தற்போது  ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஆஸ்திரேலிய டாலர் காப்புத்தொகையுடன் தனுஷ்கா குணதிலகாவுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. 

    மேலும், அவர் டேட்டிங் தொடர்புடைய சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தனுஷ்காவின் பாஸ்போர்ட் காவல்துறையிடம் உள்ளதால் அவர் தனது சொந்த நாடான இலங்கைக்குச் செல்ல முடியாது. அதோடு, குறிப்பிட்ட முகவரியில் தனுஷ்கா தங்கியிருக்க வேண்டும் என்றும், தினமும் காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்றும் சிட்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    இதையும் படிங்க: காதலனால் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக வீசப்பட்ட ஷ்ரத்தாவின் தலை ஏன் அவசியம்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....