Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநோயாளிகளின் தகவல்களை வெளியிட்டால் நடவடிக்கை

    நோயாளிகளின் தகவல்களை வெளியிட்டால் நடவடிக்கை

    நோயாளிகளின் விவரங்களை மருத்துவர்கள் வெளியிட்டால் அவர்களின் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கடந்த ஜூலை 22-ம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளின் விவரங்களையோ, புகைப்படங்களையோ வெளியிட்டால் அவர்களின் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் தெரிவித்துள்ளதாவது:

    இம்மாதிரியான குற்றங்கள் நடைபெற்றால், அந்தக் குற்றங்களில் ஈடுபடும் மருத்துவர்களின் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் சான்றிதழ் ரத்து செய்யப்படும். 

    மேலும், நடப்பாண்டு ஜனவரி முதல் இதுவரை ஐந்து மருத்துவர்களுக்கு நோயாளிகளின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த ஐந்து மருத்துவர்களிடத்திலும் மன்னிப்பு கடிதம் பெறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோயாளிகளின் நலன்மீது மிகுந்த அக்கறையுள்ளது. 

    இவ்வாறு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில் தெரிவித்தார். 

    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற டேவிட் டிரிம்பிள் காலமானார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....