Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்கோலாகலமாக தொடங்கியது அண்ணாமலையார் கோயில் தேரோட்டம்! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    கோலாகலமாக தொடங்கியது அண்ணாமலையார் கோயில் தேரோட்டம்! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அண்ணாமலையார் கோயில் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. 

    திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    இத்திருவிழாவின் 6 ஆம் நாளான நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் மர யானையில் தோன்றினார். சந்திரசேகரர் வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7 ஆம் நாளான இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. 

    முதலில் விநாயகர் தேரும் அதன் பின்னர் முருகர் தேரும் வீதியில் உலா வரும். அதன் பிறகே பெரிய தேர் என்று சொல்லப்படும் சாமி தேர் இழுக்கப்படுகிறது. ஒருபக்கம் ஆண்களும் மற்றொரு பக்கம் பெண்களும் சேர்ந்து தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து வருகின்றனர். 

    இதைத்தொடர்ந்து இன்று இரவு அம்மன் தேரோட்டம் நடைபெறும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே இழுப்பார்கள். அதேபோல் சண்டிகேஸ்வரர் தேர் இழுக்கப்படுகிறது. இதனை சிறுவர், சிறுமியர்கள் மட்டுமே இழுப்பார்கள். 

    பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் மீது ஏற்றப்படும்.

    தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு தடை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....