Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தளபதி விஜயின் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடிய பிரபலங்களும் காணொளிகளும்; அடுத்த சிங்கள் பாடலுக்கு ஆட...

    தளபதி விஜயின் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடிய பிரபலங்களும் காணொளிகளும்; அடுத்த சிங்கள் பாடலுக்கு ஆட ரெடியா!

    தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான், பீஸ்ட்! இத்திரைப்படத்தில் விஜய் அவர்களுக்கு ஜோடியாக பூஜா ஹெக்தே நடிக்க, அனிரூத் அவர்கள் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலமாவு கோகிலா , டாக்டர் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய நெல்சன் தீலிப்குமார் அவர்கள்தான் பீஸ்ட் திரைப்படத்தையும் இயக்குகிறார். பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் மாதம் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    beastஏப்ரல் மாதத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளிவர உள்ளதால், இம்மாதமே பீஸ்ட் திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பீஸ்ட் திரைப்படத்தில் இருந்து வெளிவந்துள்ள அரபிக்குத்து பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை ஆறு மணியளவில் பீஸ்ட் திரைப்படத்தின் அடுத்த பாடலான “ஜாலியோ ஜிம்கானா” வெளியாகவிருக்கிறது. 

    ஏற்கனவே வெளியான அரபிக்குத்து பாடலில் விஜயின் லுக்குகளும், நடன அசைவுகளும் அரபிக்குத்து பாடலில் பலருக்கும் பிடித்த அம்சமாய் மாறிப்போனது. அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி அவர்களின் குரலில் நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் கடந்த மாதம் காதலர் தினத்தன்று வெளியான அரபிக்குத்து பாடல் இன்றளவும் ட்ரெண்டில் உள்ளது. 

    பல பிரபலங்களும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி சமூக வலைத்தளத்தில் பதிவேற்ற அவையும் ட்ரெண்டாக ஆரம்பித்துவிடுகின்றன. இவ்வாறாக அரபிக்குத்து பாடலுக்கு சமந்தா முதல் தென்னாப்ரிக்க கிரிக்கெட் வீரர் டூப்ளிஸிஸ் ஆடிய நடனம் வரை பலவும் இணையத்தில் வைரல்தான்.

    அப்படியாக வைரலான காணொளிகள் சிலவற்றை இங்கே காணலாம்; 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....