Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நம் நாட்டு தேயிலையில் தரம் இல்லையா? உலகளவில் பேச்சு!

    நம் நாட்டு தேயிலையில் தரம் இல்லையா? உலகளவில் பேச்சு!

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைகளில் அளவுக்கு அதிகமான இரசாயனங்களும், பூச்சிக்கொல்லிகளும் இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து திருப்பி அனுப்பப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இலங்கையிலிருந்து தேயிலைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால், அந்நாடு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில் உள்ளது.

    இந்நிலையில், இலங்கையின் தேயிலை மார்க்கெட்டை உலக அளவில் இந்தியா பிடிக்கலாம் என்று நினைத்து, தேயிலை ஏற்றுமதியை கடந்த சில மாதங்களாக அதிகரித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டில் 195.90 மில்லியன் கிலோ தேயிலையை, அதாவது ரூ. 5,246.89 கோடி மதிப்பில் இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. நடப்பாண்டில் 300 மில்லியன் கிலோ தேயிலையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்திய தேயிலைகளில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மற்றும் இரசாயனங்கள் கலந்து இருப்பதாக பல நாடுகள், இந்திய தேயிலையை திருப்பி அனுப்புகின்றது. அதோடு உள்ளூரிலும் பல நிறுவனங்கள், தேயிலைகளை திருப்பி அனுப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்தியாவில் விற்கப்படும் அனைத்து தேயிலைகளும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும் தேயிலை வாங்கும் பெரும்பாலான நாடுகள், அவற்றை திருப்பி அனுப்புவதற்கு என்ன காரணம் என்பதை கூடிய விரைவில் ஆய்வு செய்ய வேண்டும் என்று இந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்ஷுமான் கனோரியா தெரிவித்துள்ளார். பல நாடுகள் தேயிலை வாங்கும் போது, கடுமையான நுழைவு விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. பெரும்பாலான நாடுகள் EU தரநிலைகளின் மாறுபாடுகளைப் பின்பற்றுகின்றன என்றும், அவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிகளை விட மிகவும் கடுமையானவை என்றும் அன்ஷுமான் கனோரியா கூறியுள்ளார்.

    இந்திய தேயிலை உலகளவில் பிரபலமடைய வேண்டுமெனில், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை, இன்னமும் கடுமையாக்க வேண்டும் என்று பலர் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்கள். தேயிலை என்பது ஒரு ஆரோக்கிய பானமாக இருப்பதால், தரத்தில் சமரசம் இருக்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

    தேயிலை வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தேயிலை உற்பத்தியாளர்கள் தற்போதுள்ள இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உலக நாடுகளுக்கு ஏற்ப, விதிமுறைகளை மாற்றியமைக்கும் பிரச்சனை குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

    முகநூல் பக்கத்தின் தலைமை இயக்க அதிகாரி பதவியிலிருந்து விலகலா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....