Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமீன் வாங்குனா... பெட்ரோல் இலவசம்..? புரட்டாசியை புறம் தள்ளி அலைமோதிய மக்கள் கூட்டம்

    மீன் வாங்குனா… பெட்ரோல் இலவசம்..? புரட்டாசியை புறம் தள்ளி அலைமோதிய மக்கள் கூட்டம்

    மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் புதியதாக திறக்கப்பட்டுள்ளதுதான், பிஎஸ்ஏ மீன் மார்க்கெட் மற்றும் உணவகம். இந்த திறப்பு விழாவை முன்னிட்டு பிஎஸ்ஏ நிறுவனம் அறிவித்த அறிவிப்பு ஒன்று பலரையும் கவர்ந்துள்ளது. பெரும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. 

    பிஎஸ்ஏ மீன் மார்க்கெட் மற்றும் உணவகத்தில் திறப்பு விழா சலுகையாக 400 ரூபாய்க்கும் மேல் மீன் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளனர், இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    நுகர்வோர்கள் 400 ரூபாய்க்கும் மேல் மீன் வாங்கினால் அவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான டோக்கன் கொடுக்கப்படுகிறது. அந்த டோக்கனின் மூலம் குறிப்பிட்ட பெட்ரோல் பாங்கிற்கு சென்று பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். 

    இதையும் படிங்க: சமூக நீதியின் தூணாக விளங்கிய வலிமை வாய்ந்தவரின் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

    இதுகுறித்து உரிமையாளர் கூறியதாவது:

    மதுரை மாநகர் மக்களின் பேராதரவை பெற்ற பிஎஸ்ஏ மீன் ஸ்டால் நிறுவனம் இன்று மதுரை பெத்தானியாபுரம் குரு தியேட்டர் எதிரே எங்களது புதிய கிளையை திறந்து உள்ளோம். அதன் பொருட்டே இந்த சலுகை. 

    மக்களுக்கு குறைந்த விலையில் சுத்தமான மீன்கள் வழங்குவதை குறிக்கோளாக கொண்டு விற்பனை செய்து வருகிறோம், மதுரை மக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருவதற்கு எங்களின் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம், அதுபோல எங்களது பெத்தானியாபுரத்தில் திறக்கப்பட்டு உள்ள புதிய கிளைக்கும் ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....