Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

    தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

    தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 இடங்களுக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. 

    கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி, ஜூன் 27-ம் தேதி முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து 28-ம் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இந்நிலையில், இன்று உள்ளாட்சி இடைத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. 

    கிராப்புறங்களில் ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கான 498 பதவிகளும் நகர்ப்புறங்களில் மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 12 பதவிகளும், என மொத்தம் 510 இடங்கள் காலியாக உள்ளது. 

    இந்நிலையில், இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. மேலும், மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

    இன்று நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூலை 12-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இலங்கையில் இருந்து தப்பி ஓடினாரா அதிபர் கோட்டபய ராஜபக்சே?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....