Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிகரித்த லாக் - அப் மரணங்கள் ; தடுக்க டிஜிபி. சைலேந்திர பாபு எடுத்த அதிரடி...

    அதிகரித்த லாக் – அப் மரணங்கள் ; தடுக்க டிஜிபி. சைலேந்திர பாபு எடுத்த அதிரடி நடவடிக்கை!

    காவல் நிலையங்களில் நிகழும் கைதிகளின் இறப்பை தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து காவல் துறையினருக்கு டிஜிபி. சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    தமிழகத்தில் அண்மைக்காலமாக லாக்-அப் மரணங்கள் அடிக்கடி நிகழ்கிறது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் கைதிகள் இறப்புக்கு, காவல் துறை தரப்பில் கைதிகளின் உடல் நலக்குறைவே காரணம் எனக் கூறப்படுகிறது, ஆனால் உயிரிழக்கும் கைதிகளின் உறவினர்களோ அடித்துக் கொலை செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கின்றனர். இதனைத் தடுக்கும் விதமாகவே டிஜிபி அலுவலகத்தில் இருந்து வழிகாட்டு நெறிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், ” கைது செய்யப்படுவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிதல் வேண்டும். காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்கு தேவையான வசதிகள் உள்ள மாவட்ட மருத்துவமனையில் முழுமையாக செய்யப்பட வேண்டும்.உண்மையான சோதனையின்றி உடற்தகுதி சான்றிதழ் பெறும் நடை முறையை நிறுத்தி கொள்ள வேண்டும்.தமிழகத்தில் பகலில் கைது செய்யப்பட்டவர்களை மாலை 6 மணிக்குள் சிறையில் அடைக்க வேண்டும்.குறிப்பாக காவல் நிலையங்களில் கைதிகளிடம் இரவில் விசாரணை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.

    போலீஸ் நிலையம், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் ஆகியவற்றில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டி ருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.போலீஸ் சித்ரவதை பற்றிய தவறான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். குற்றம் சாட்டப்பட்டவர் கால்-கை வலிப்பு நோய் தொடர்பான வரலாறு குறித்து முழுமையாக சரி பார்க்கப்பட வேண்டும்.

    சந்தேக நபர்களை பொதுமக்கள் அடிக்கும்போது, அவரை சம்பவ இடத்திலிருந்து இருந்து நேரடியாக 108 ஆம்புலன்ஸ் அல்லது பிற தனியார் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.அவர்களை போலீஸ் நிலையத்திற்குள் கொண்டு வரவோ அல்லது போலீஸ் காவலில் எடுக்கவோ கூடாது. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்காக போலீஸ் நிலையத்திற்கு குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு வரக்கூடாது.

    அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு சரியாக வேலை செய்வதை உறுதி செய்து கொள்ளவும். குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்கும்போது அவர்கள் கொடுங்குற்றவாளியாக இருந்தால் தவிர அவர்களை விரட்டக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் தமிழக காவல் துறை சார்பாக “காவல் நிலைய மரணங்கள் தடுப்பு” என்கிற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    கால்நடை மருத்துவரைக் கடத்திச்சென்று திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....