Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇலவச புடவை வழங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

    இலவச புடவை வழங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

    வாணியம்பாடி பகுதியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவை வழங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வாரச்சந்தை மைதானம் அருகில் ஐயப்பன் என்பவர் ஜல்லி நிறுவனம் நடத்தி வருகிறார். 

    இவர் தனது நிறுவனத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக தைப்பூசத்தன்று இலவச புடவைகள் வழங்கி வருகிறார். நாளை தைப்பூசம் நடைபெற உள்ள நிலையில், புடவை வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தகவல் அப்பகுதியின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு தெரிந்த நிலை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அங்கு கூடினர். 

    இதனால் புடவை வழங்கும் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

    மேலும் இந்தக் கூட்ட நெரிசலில் காயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து நகர காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ‘எங்களை மன்னித்துவிடுங்கள்’ என எழுதி வைத்து சென்ற இரு கொள்ளையர்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....