Sunday, March 17, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புதமிழ்நாடு காவலர் தேர்வு முறையில் புதிய மாற்றம்!

    தமிழ்நாடு காவலர் தேர்வு முறையில் புதிய மாற்றம்!

    தமிழ்நாடு காவலர் தேர்வு முறையில் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

    தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை, இரண்டாம் நிலை சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 30-ம் தேதி வெளியிடப்பட்டது. 

    இந்த அறிவிப்பின்படி, ஒட்டுமொத்தமாக 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.tnsurb.tn.gov.in என்ற இணையதளத்தை அனுகும்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்திருந்தது. 

    இந்நிலையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவலர் தேர்வு முறையில் சில மாற்றங்களை புகுத்தியுள்ளது. 

    அதன்படி, 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் காவலர் தேர்வில் எழுத்து தேர்வுக்கு 70 மதிப்பெண்களும், உடல் திறன் தேர்வுக்கு 24 மதிப்பெண்களும், சிறப்பு மதிப்பெண்களாக 6 மதிப்பெண்களும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதற்கு முன்பாக காவலர் தேர்வுகளில் எழுத்து தேர்வுக்கு 80 மதிப்பெண், உடல் திறன் தேர்வுக்கு 15 மதிப்பெண், சிறப்பு மதிப்பெண் 5-ஆக வழங்கப்பட்டு வந்தது. 

    தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள மேற்கூறிய பணியிடங்களுக்கான விண்ணப்பமானது ஆகஸ்ட் 15-ம் தேதி வரையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....