Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் 2 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்

    தமிழகத்தில் 2 நாட்களுக்கு மதுபானக் கடைகள் மூடல்

    தமிழகத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதிகளில் மதுபானக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களில் மதுபானக் கடைகள் மூடப்படும். மேலும், இந்த உத்தரவை ஆண்டுதோறும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பது வழக்கம். 

    அந்த வகையில் ஜனவரி 16 மற்றும் 26 ஆம் தேதிகளில் மதுபானக் கடைகளை மூட சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

    மதுபானக் கடைகளை மூடுவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டத்தில் 16.01.2023 அன்று “திருவள்ளுவர் தினம்”, மற்றும் 26.01.2023-அன்று “குடியரசு தினம்” ஆகியவற்றை முன்னிட்டு, அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபானக் கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை மேற்கண்ட நாட்களில் மூடப்பட்டு இருக்கும்.

    மேற்படி நாட்களில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்படி தினங்களில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது 

    அஜித் ரசிகர் உயிரிழப்பு; அறிவுரை கூறிய சைலேந்திர பாபு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....