Thursday, March 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநாசாவின் நாட்காட்டியில் இடம்பிடித்த தமிழ்நாடு மாணவி

    நாசாவின் நாட்காட்டியில் இடம்பிடித்த தமிழ்நாடு மாணவி

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள நாட்காட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி வரைந்த ஓவியம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. 

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாட்காட்டி வெளியிடப்படுவது வழக்கம் ஆகும். அந்த வகையில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் இடம்பெறும் ஓவியத்திற்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த ஓவிய போட்டியில் உலக அளவில் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மேலும் அவர்கள் வித்தியாசமான ஓவியங்களை வரைந்தனர். 

    இந்தப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் தித்திகா என்ற மாணவியும் பங்கேற்றார். இதையடுத்து மாணவி தித்திகா வரைந்த ஓவியம் 2022-2023 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. 

    ஓவியம் வரைந்து நாசாவின் நாட்காட்டியில் இடம்பிடித்த மாணவி தித்திகாவுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் ஓவியங்கள் தொடர்ந்து 4-வது முறையாக நாசாவின் நாட்காட்டியில் இடம்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    ‘பாலியல் துன்புறுத்தலில் வீராங்கனைகள்’ – இரண்டாவது நாளாக தொடரும் மல்யுத்த வீர, வீராங்கனைகளின் போராட்டம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....