Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புதமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு....பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதியும் அறிவிப்பு

    தமிழகத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு….பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதியும் அறிவிப்பு

    இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்று சொல்லப்படும் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை அதாவது என்டிஏ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை 17-ம் தேதி, நாடு முழுவதும் 497 நகரங்களில், 3,570 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்காக 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர்.

    தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர். சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு தாமதம் ஆனதை தொடர்ந்து நீட் தேர்வு முடிவும் காலதாமதம் ஆனது. இதனால் நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை மற்றும் தமிழகத்தில் நடத்தப்படவிருந்த இளநிலை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வும் தள்ளிவைக்கப்பட்டது. இதன் காரணமாக நீட் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    இந்த சூழலில் நீட் தேர்வு முடிவுகள் இன்று (7-ந்தேதி) வெளியாகும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இதனையடுத்து நீட் தேர்வு விடைத்தாள் ஒ.எப்.ஆர். ஷீட் இணையத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி இன்று பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in என்கிற முகவரியில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்களின் பெயர், பாடவாரியாக பெற்ற மொத்த மதிப்பெண் மற்றும் அதன் சதவீதம் ஆகியவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

    நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க : திடீர் மாரடைப்பால் மரணமடைந்த அமைச்சர்…பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....