Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்வேலை நிறுத்த போராட்டங்கள் வேலை நாட்களாக மாற்றம் - தமிழக அரசு அறிவிப்பு

    வேலை நிறுத்த போராட்டங்கள் வேலை நாட்களாக மாற்றம் – தமிழக அரசு அறிவிப்பு

    அதிமுக அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நாட்கள் பணிக் காலமாக வரன்முறைப்படுத்தி அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    கடந்த அதிமுக ஆட்சியின் போது அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அந்த நாட்கள் வேலை நாட்களில் சேருமா என்ற கேள்வி இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த நாட்கள் வரன்முறை படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் ஜாக்டோ ஜியோ சங்கத்தினர், வருவாய்த்துறை, ஊழியர்கள் வேலை நிறுத்தத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அந்த நாட்கள் தற்போது பணிக்காலமாக கருதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    போராட்ட காலத்தை வரைமுறை படுத்தும் போது போராட்டம் காரணமாகவே ஊழியர் பணிக்கு வராமல் இருந்தார் என்பதையும் போராட்டம் முடிந்தவுடன் பணிக்கு திரும்பினார் என்பதையும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடபட்டுள்ளது.

    சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களில் விரைவில் ஆய்வு: எதற்கு தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....