Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களில் விரைவில் ஆய்வு: எதற்கு தெரியுமா?

    சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களில் விரைவில் ஆய்வு: எதற்கு தெரியுமா?

    தமிழக அரசின் சமூக நீதி கண்காணிப்பு குழு விரைவில் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

    தமிழ்நாடு அரசால் சமூக நீதி கண்காணிப்பு குழு அமைக்கபட்டது அதன் தலைவராக முனைவர் சுப.வீரபாண்டியன் கொண்டு இந்த குழு இயங்கி வருகிறது. இந்த குழு கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றபடுகிறதா என்பதை கண்காணிக்கும். மேலும் சமூக நீதி சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு புகராக பரிந்துரை செய்யும்.

    இந்த நிலையில் சமூக நீதி கண்காணிப்பு குழுவின் 5வது கூட்டம் அதன் தலைவர் தலைமையில் கூடி,சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.

    மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 6 பல்கலைக்கழகங்களில் டிசம்பர் மாதத்திற்குள் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய முடிவு எடுத்துள்ளது.

    குரூப்-பி பணி நியமனங்களில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கிட அரசாணை வெளியிட வேண்டும்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....