Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை

    மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 வழங்க தமிழக அரசு அரசாணை

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை (நவம்பர் 24) முதல் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

    மயிலாடுதுறை மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக விளைநிலங்களும் வீடுகளும் சேதமடைந்தன. இதையடுத்து சேதமடைந்த பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் தெரிவித்து இருந்தார்

    இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை (நவம்பர் 24) முதல், ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

    இதன்படி, சீர்காழியில் 99,512 குடும்ப அட்டை தாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டை தாரர்களுக்கும், தலா ஆயிரம் ரூபாய் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிவாரண உதவிகளுக்காக 16 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    நவம்-26 முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி; பள்ளிக்கல்வித்துறை முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....