Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளம்பர பேனர் விவகாரம் முறைகேடு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக அரசு விளக்கம்...

    விளம்பர பேனர் விவகாரம் முறைகேடு: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக அரசு விளக்கம்…

    விளம்பர பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம், விளம்பர பேனர் ஒன்றுக்கு ரூபாய் 7,906 செலவிடப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டை தமிழக அரசு மீது வைத்திருந்தார். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்தவொரு தனியொரு நிறுவனமும் ஈடுபடுத்தபடவில்லை.

    மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் இந்த விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஒன்பது மாவட்டங்களில் ஊராட்சிகளின் வாயிலாக அப்பகுதியிலுள்ள அச்சகங்களின் மூலம் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 84,653 எண்ணிக்கையிலான விளம்பரப் பதாகைகள் பல்வேறு அளவுகளில் (அதாவது 6×4, 12×8, 10×8 அடி) அச்சடிக்கப்பட்டுள்ளன.

    ஒரே ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு புறம்பான தகவல் ஆகும். இவற்றிற்கான சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றிற்கு சுமார் 611 ரூபாய் (சரக்கு மற்றும் சேவைக்கட்டணம் உட்பட) செலவிடப்பட்டுள்ளது.

    இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட, புகாரில் பேனர் ஒன்றுக்கு ரூபாய் 7,906 செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது முற்றிலும் தவறானதாகும் என எடப்பாடி பழனிசாமிக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

    நிறுத்தப்பட்ட இலவச பேருந்துகளை இயக்க வேண்டும்: கல்லூரி மாணவர்களின் போராட்டத்தால் பரபரப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....