Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இமயமலையில் அஜித்துடன் அட்வென்ச்சர் ட்ரிப் சென்ற மஞ்சு வாரியர் ! AK61 நியூ அப்டேட்

    இமயமலையில் அஜித்துடன் அட்வென்ச்சர் ட்ரிப் சென்ற மஞ்சு வாரியர் ! AK61 நியூ அப்டேட்

    நடிகர் அஜித்குமார் குறித்த மஞ்சுவாரியரின் பதிவு சமூகவலைதளத்தை கலக்கி வருகிறது. 

    தென்னிந்திய நடிகர்களுள் மிக முக்கியமான ஒருவர், அஜித்குமார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடரந்து அஜித்குமார் மீண்டும் போனி கபூர் தயாரித்து எச்.வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். 

    இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே-61 என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்காக அஜித்குமார் இருக்கும் தோரனை அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி, அனைத்து தமிழ் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்துவருகிறது. இந்த  ஏகே-61 திரைப்படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்து வருகிறார். இவர் முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் நடித்திருப்பார். 

    ஏகே 61 திரைப்படத்தில் நடித்து வரும் மஞ்சு வாரியர், அஜித்தின் பைக் ரேஸ் குழுவுடன் இணைந்து இமயமலைக்கு பயணித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அஜித் மற்றும் அவரது நண்பர்கள் குழுவுடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் பயணம் செய்துள்ளார். 

    இந்த தகவலினை பகிர்ந்துள்ள மஞ்சு வாரியர், “எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு மனமார்ந்த நன்றிகள். எனது முதல் இரு சக்கர வாகனப் பயணத்திற்காக அட்வென்ச்சர் ரைடர்ஸ் இந்தியா குழுவில் இணைவதில் பெருமை அடைகிறேன்” என்று பதிவிட்டு பயணத்தின்போது அஜித் உடன் எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்றளவும் இந்த பதிவானது சமூகவலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

    மஞ்சு வாரியரின் இந்த பதிவானது 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும், 6000-க்கும் மேற்பட்ட ரீ-ட்விட்டுகளையும் பெற்றுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....