Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஊடகங்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும்- நீதிபதி என்.வி.ரமணா

    ஊடகங்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும்- நீதிபதி என்.வி.ரமணா

    ஊடக நிறுவனங்களின் உண்மைத் தன்மையை அவ்வப்போது மதிப்பிட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். 

    தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியிட்டு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துக்கொண்டார். இந்த விழாவில், என்.வி.ரமணா ஊடகங்கள் குறித்து பேசினார்.

    அப்போது நீதிபதி என்.வி.ரமணா கூறியுள்ளதாவது :

    ஜனநாயகத்தின் முதுகெலும்பாக சுதந்திர ஊடகங்கள் உள்ளன. பத்திரிகையாளர்கள் மக்களின் கண்களாகவும், காதுகளாகவும் அறியப்படுகிறார்கள். மேலும், ஓவ்வொரு ஊடக நிறுவனங்களின் கடமையும் உண்மையை முன்வைப்பதே ஆகும்.

    மேலும், பத்திரிகைகளில் அச்சிடப்படுவதெல்லாம் உண்மை என்று மக்கள் நம்புகிறார்கள். ஆகவே, ஊடகங்கள் வணிக நோக்குடன் செயல்படாமல், நேர்மையுடன் செயல்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.

    இந்தியாவின் இருண்ட காலம் என்று கருதப்படும் அவசரநிலையின் போது (Emergency) வணிக நோக்குடன் செயல்படாத ஊடகங்களால் மட்டுமே, அவற்றை எதிர்த்து போராட முடிந்தது. 

    ஊடக நிறுவனங்களின் உண்மைத் தன்மையை அவ்வப்போது மதிப்பிட வேண்டும். சோதனைக் காலங்களில் அவற்றின் நடத்தையில் தக்க மாற்றங்களை கொண்டுவர தகுந்த முடிவுகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

    கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது- உச்சநீதிமன்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....