Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கௌரி கிஷனின் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறாரா சூப்பர் ஸ்டாரின் மகள்?

    கௌரி கிஷனின் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறாரா சூப்பர் ஸ்டாரின் மகள்?

    தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் சுஸ்மிதா கோனிடேலா தயாரிப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். இவர் ஏற்கனவே, சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில் தற்போது தயாரிப்பாளர் அவதாரத்தை எடுக்க உள்ளார்.

    சுஸ்மிதா அவர்கள் தயாரிக்கும் திரைப்படத்தில் 96 திரைப்பட புகழ் கௌரி கிஷன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், இத்திரைப்படத்தில் சந்தோஷ் சோபன் அவர்களும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் மூலம், நடிகை கௌரி கிஷன் தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    இந்தப் படத்தை குமார் திம்மலா என்பவர் இயக்குகிறார். விஷ்ணு பிரசாத் மற்றும் சுஷ்மிதா இருவரும் இந்த படத்தை தயாரிக்கின்றனர். படத்திற்கு ‘ஸ்ரீதேவி ஷோபன் பாபு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ரொமான்ஸ் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கௌரி கிஷன் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அந்தப் படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதால் கௌரி கிஷனுக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. முதல் படத்திலேயே கௌரிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். கௌரி கிஷன் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கில் 96 படத்தின் ரீமேக்கிலும் அதே கதாபாத்திரத்தில் கௌரி நடித்திருந்தார். தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த கௌரி தற்போது தெலுங்கில் கதாநாயகியாக ரசிகர்களைக் கவரத் தயாராகியுள்ளார்.

    டான் திரைப்படம் இளைஞர்களின் பார்வையில் எப்படி இருக்கு?

    ஏன் இந்த குழப்பம்? என்று கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....