Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமும்பை ரயிலில் வலியில் துடித்த இளம்பெண்; உதவிகரம் நீட்டிய பரிசோதகர்கள்

    மும்பை ரயிலில் வலியில் துடித்த இளம்பெண்; உதவிகரம் நீட்டிய பரிசோதகர்கள்

    மும்பை ரயிலில் பயணித்த இளம்பெண் ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதும், அங்குள்ள 2 டிக்கெட் பரிசோதர்கள் செய்த உதவி பெரும் பாராட்டை பெற்று வருகிறது. 

    மராட்டிய மாநிலம் ஐரோலி பகுதியில் ரயிலில் ஏறியவர் பிங்கி ராய் என்ற இளம்பெண். இவருக்கு வயது 19. பிங்கி கராத் பகுதியைச் சேர்ந்தவர். இந்தப் பெண் படித்துக்கொண்டே கன்சோலியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை பார்த்து வருகிறார். 

    இந்நிலையில், அவர் மும்பை ரயிலில் பயணித்தபோது திடிரென நெஞ்சு வலி ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமநிலையில், வலியால் துடி துடித்துள்ளார். 

    அப்போது அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதர்கள் தீப வைத்யா மற்றும் ஜெயின் மார்செல்லா ஆகிய இருவரும் உடனடியாக அப்பெண் இருக்கும் இடத்திற்கு சென்று அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

    இதையடுத்து பிங்கிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் காப்பாற்றப்பட்டார். பிங்கியின் தாயார் டிக்கெட் பரிசோதர்கள் இருவருக்கும் நன்றி தெரிவித்தார். மும்பை டிக்கெட் பரிசோதகர்களின் இந்தச் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இந்தியாவின் ஐபிஎல் பாணியில் தென்னாப்பிரிக்காவில் புதிய கிரிக்கெட் போட்டி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....