Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமாணவர்களின் வழிகாட்டி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள்-குடும்பத்தினர் மரியாதை

    மாணவர்களின் வழிகாட்டி அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள்-குடும்பத்தினர் மரியாதை

    ஏவுகணையின் நாயகனான அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது தேசிய நினைவகத்தில் குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். 

    ராமேஸ்வரம் அருகே அமைந்துள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் இன்று (அக்டோபர் 15) அவரின் 91-வது பிறந்தநாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சி தேசிய நினைவகத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் சமாதி முன்பு, ராமேஸ்வரம் பள்ளிவாசல் ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் துவா தொழுகை நடைபெற்றது. 

    அப்துல் கலாம் சமாதி முன்பு அரை மணி நேரம் நடைபெற்ற துவா சிறப்பு தொழுகை கூட்டத்தில் ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகளும் அப்துல் கலாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். அதன் பிறகு, அப்துல் கலாமின் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் ஏபிஜெ அப்துல் கலாம் குடும்பத்தைச் சேர்ந்த அவரது பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத், அவரது அண்ணன் மகள் ஆயிஷா பேகம், மகன் ஜெயினுலாதீன், மற்றும் உறவினர்கள் நிஜாமுதீன் மற்றும் நடிகர் தாமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    மேலும், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறியாளர் முருகன், மணிகண்டன், தேசிய நினைவுக டி.ஆர்.டி.ஓ சார்பில் பொறுப்பாளர் அன்பழகன், சமூக ஆர்வாளர் பழனிச்சாமி உட்பட ஜமாத் நிர்வாகிகள், குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். 

    இதையும் படிங்க: இனி சென்னையிலிருந்து பெங்களூருக்கு பறக்கலாம்! நவம்பரில் வரப்போகுது ‘வந்தே பாரத்’ ரயில்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....