Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமா குழப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும்...

    நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமா குழப்பத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும்…

    ‘குரூப்-1’ தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் நாளை இயங்குவது குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த மாதம் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகைக்கு கூடுதலாக ஒருநாள் விடுமறை அளிக்கப்பட்டது. அக்டோபர் 25-ஆம் தேதி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை பள்ளிகள் செயல்படும் என முன்னவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை பள்ளிகள் செயல்படவுள்ளது. 

    இதனால், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்தபடி, குரூப்-1 முதல்நிலை தேர்வு 19-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மேலும், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குரூப் 1 தேர்வுக்கான கண்காணிப்பாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 

    இவைகளோடு, நாளை ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புகளுக்கு பருவ இடை தேர்வு நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படியாக சூழல்கள் இருக்க, குரூப் 1 தேர்வு பணி ஒதுக்கப்பட்ட ஆசிரியர்கள், பள்ளிகளில் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாளை பள்ளிகள் இயங்குவது குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் குழப்ப மனநிலையில் உள்ளனர்.

    இதையும் படிங்கவரும் சனிக்கிழமை 19 அன்று அனைத்து பள்ளி , கல்லூரிகளுக்கு முழு வேலைநாள்: தமிழக அரசு அறிவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....