Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்கே.ஜி.எஃப்-ஐ மிஞ்சியதா ஷாருக்கானின் பதான்? - வெளிவந்த ரிப்போர்ட்!

    கே.ஜி.எஃப்-ஐ மிஞ்சியதா ஷாருக்கானின் பதான்? – வெளிவந்த ரிப்போர்ட்!

    நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளிவந்த முதல் நாளில் உலகளவில் ரூ.106 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜீரோ என்ற திரைப்படம் வெளியாகியது. இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகளாக ஷாருக்கான் நடிப்பில் திரைப்படங்கள் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

    இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் பதான் என்ற திரைப்படம் கடந்த 25-ஆம் தேதி வெளியாகியது. இத்திரைப்படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளனர். மேலும், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படமானது யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50-ஆவது படமாகும். 

    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பதான் திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி, முதல்நாள் பதான் திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.57 கோடியை வசூல் செய்துள்ளது. உலகளவில் ரூ.106 கோடியை வசூல் செய்துள்ளது. 

    மேலும், முதல் நாள் இந்திய வசூலில் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் வசூலை பதான் முறியடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அத்துடன், திரைப்படம் வெளியான முதல் நாளே பதான் திரைப்படமானது வசூலில் சதம் அடித்துள்ளது பெரிய பேசு பொருளாய் மாறியுள்ளது. 

    பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் காலமானார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....