Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பதான் திரைப்படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

    பதான் திரைப்படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

    பதான் திரைப்படத்திற்காக ஷாருக்கான் மற்றும் இதர நடிகர்கள் பெற்றுள்ள சம்பளம் குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. 

    ஷாருக்கானின் திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை பெறவில்லை என்ற காரணத்தினால் அவர் தொடர்ந்து சில காலம் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்தார். ஷாருக்கானின் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகிவிட்டது. 

    இதனிடையே, பாலிவுட் என்று இல்லாமல், இந்தியா முழுவதும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டுவந்தார், ஷாருக்கான். ரசிகர்களும் ஷாருக்கானின் அடுத்த திரைப்படத்திற்காக காத்திருந்தனர். சில சமயங்களில் பொறுமை இழந்த ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் ஷாருக்கான் திரைப்படத்தை விரைவில் திரையில் காண வேண்டும் என்று தெரிவித்து வந்தனர். சொல்லப்போனால், ஷாருக்கான் அவர்களே தனது திரைப்படத்திற்காக காத்திருந்தார் என்றே கூற வேண்டும்.

    இப்படியாக சூழல்கள் இருக்க, ஒருவழியாக ஷாருக்கான் நடிக்க இருக்கும் திரைப்படங்கள் குறித்தான அறிவிப்புகள் கடந்த ஒரு வருடமாக வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி ‘பதான்’ என்ற திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து முடித்துள்ளார். 

    சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். பதான் திரைப்படமானது அடுத்த வருடம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர்.

    சமீபத்தில் பதான் திரைப்படத்திலிருந்து வெளிவந்த பாடல் இணையத்தில் பெரும் ஹிட் அடித்தது. இதோடு, பதான் பட பாடலில் தீபிகா படுகோனே அதீத கிளாமரில் நடித்திருப்பதாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும், பதான் திரைப்படத்தை புறக்கணிப்போம் என்ற வாதமும் ட்விட்டரில் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், பதான் திரைப்படத்திற்காக ஷாருக்கான் மற்றும் இதர நடிகர்கள் பெற்றுள்ள சம்பளம் குறித்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அதன்படி, ஷாருக்கான் ரூ.100 கோடியும், ஜான் ஆபிரகாம் ரூ.40 கோடியும், தீபிகா படுகோனே ரூ.20 கோடியும் சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பதான் திரைப்படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் ரூ.6 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

    நயன்தாராவின் கனெக்ட்; வெளிவந்த பாசிட்டிவிட்டி பாடல்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....