Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகோளாறுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம்!

    கோளாறுடன் ஸ்பைஸ் ஜெட் விமானம்!

    துபாயிலிருந்து மதுரை வரும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் தாமதாமாக வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த 24 நாள்களில் 9-வது முறையாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதாக விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் கூறியுள்ளது. 

    பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் குறைந்த செலவுடைய விமானங்களால், பயணிகளுக்கான சிறந்த சேவையை கொடுக்க தவறி உள்ளதாக விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் குறிப்பிட்டுள்ளது. 

    திங்கள்கிழமை பி737 மேக்ஸ் ரக விமானம் மங்களூரு- துபாய் இடையே இயக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் தரையிறங்கியவுடன் விமனாத்தின் முன் புறமுள்ள சக்கரத்தின் அழுத்தம் குறைந்திருந்ததை பொறியாளர்கள் தங்களின் மேற்பார்வையின்போது உறுதி செய்துள்ளனர். 

    இதன் காரணமாக, மும்பையில் இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் மற்றொரு விமானம் துபாய்க்கு சென்று, அங்கிருந்த பயணிகள் மதுரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    இதனிடையே, ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட்டு வருவதால், அந்த நிறுவனத்துக்கு விமான போக்குவரத்துத் துறை இயக்குநகரம் கடந்த 6-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கதாகும். 

    நாம் காணாத பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....