Sunday, March 17, 2024
மேலும்
    Homeஅறிவியல்நாம் காணாத பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு!

    நாம் காணாத பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியீடு!

    பிரபஞ்சத்தின் தொடக்கத் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சியில் கிடைத்த  புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. 

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பிரபஞ்சம் தொடக்கத்தில் எவ்வாறு இருந்தது என்பதை தோற்றத்தின் வாயிலாக கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து தீவிரமான ஆய்வானது நாசாவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    1990-ம் ஆண்டு ஹப்பிள் தொலைநோக்கி உலகளவில் மிக முக்கிய நுண்ணோக்கியாக பார்க்கப்பட்டது. இந்த தொலைநோக்கி விண்ணில் மிதக்கும் தொலைநோக்கியாக இருந்தது. குறிப்பிட்ட ஆண்டுக்குப்பின் ஹப்பிள் தொலைநோக்கியின் பாகங்கள் பழுதடைய ஆரம்பித்தது. ஆதலால், இதற்கு அடுத்து ஒரு தொலைநோக்கியை உருவாக்க வேண்டும் என்று தோன்றவே, நாசா ஜேம்ஸ் வெப் எனும் தொலைநோக்கியை உருவாக்கியது. 

    நாசாவின் குறிக்கோள்களுள் ஒன்றாக, பிரபஞ்சம் தொடக்கத்தில் எப்படி இருந்தது என்பதை அறிய வேண்டும் என்ற ஆய்வின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு ரூ.79,000 கோடி செலவில் ஜேம்ஸ் வெப் என்ற சக்திவாய்ந்த தொலைநோக்கியை நாசா நிறுவியது. 

    இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் Ariane flight VA256 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. 

    ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரம், கிரகங்கள், அண்டங்களை ஆராய உதவும். மேலும், உலகம் தோன்றியது எப்படி என்பதையும் இத்தொலைநோக்கியின் மூலம் அறிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

    உலகின் தொடக்க காலத்தில் பல மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்த நட்சத்திரங்கள், கிரகங்களிடம் இருந்து வெளியான ஒளிகள் இப்போதும் பல மில்லியன் ஒளி ஆண்டுகளை கடந்து பயணித்துக் கொண்டு இருக்கும். பயணிக்கும் இந்த ஒளிகளை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் பதிவு செய்ய முடியும். 

    அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மிகத் துல்லியமாக ஒளிகளை பதிவுசெய்யக்கூடியவை. அப்படியாக, பல மாத காத்திருப்புக்குப் பின் இந்த தொலைநோக்கியின் மூலம் 4.6 பில்லியன் ஆண்டுகள் பயணம் செய்த பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் சிதறிக்கிடந்த ஒளிகளை பதிவு செய்தது. 

    ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மிக குறுகிய தூரத்தில் இருக்கும் பல லட்சம் பிரபஞ்ச கூட்டங்களை படம் பிடித்து அனுப்பி உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும், இப்புகைப்படத்தில் 4.6 பில்லியன் ஒளி ஆண்டுகள் பயணித்துவந்த நட்சத்திர தொகுப்புகள் இடம்பெற்றுள்தாகவும் நாசா தெரிவித்துள்ளது. 

    அடுத்த 24 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....