Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்முழுவீச்சில் ரேடார் தயாரிப்பு பணிகள்; இனி இந்தியாவும் இதுல கெத்துதான்..

    முழுவீச்சில் ரேடார் தயாரிப்பு பணிகள்; இனி இந்தியாவும் இதுல கெத்துதான்..

    தொலைதூரத்தில் இருந்து வரும் தாக்குதல்களை கண்டறிய ரேடார் சாதனம் பெரும் உதவி புரிகிறது. பல கி.மீ. தொலைவிலிருந்து தாக்குதல் நடைபெற்றாலும், அதனை மிக எளிதாக ரேடார் சாதனம் கண்டுபிடித்து விடும்.

    இந்நிலையில், ரேடார் தயாரிப்பு பணிகள் இந்தியாவில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் அதிநவீன ரேடாரை உருவாக்க இராணுவ ஆராய்ச்சி விஞ்ஞானிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரேடாரானது, 1,500 கி.மீ. சுற்றளவில் இருந்து தாக்கினாலும், அதனை கண்டுபிடித்து விடும் என்று டி.ஆர்.டிஓ., எனும் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில், இராணுவ கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில், ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை, இன்ஜின் தொழிற்சாலை, இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., இந்திய கடற்படை கொள்முதல் பிரிவு உட்பட பல நிறுவனங்கள் இடம் பெற்றன.

    கண்காட்சியின் நுழைவு வாயிலின் அருகே டி.ஆர்.டி.ஓ., அமைப்பு அரங்கு அமைத்துள்ளது. இந்த அரங்கில் ஆருத்ரா என்ற மீடியம் பவர் ரேடார் மாதிரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 300 கி.மீ. சுற்றளவில் எதிர்வரும் பலவகை தாக்குதலையும் கண்காணிக்கும் படி இந்த ரேடார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, இந்த ரேடார் விமானப்படைக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே, ஏசர் எனும் எலக்ட்ரானிக் வடிவிலான, அனைத்து வகை விமானங்களிலும் பொருந்தக் கூடிய, ரேடார் உருவாக்கப்பட்டுள்ளது. 120 கி.மீ. சுற்றளவில் எதிர்வரும் தாக்குதல்களை கண்காணிக்க முடியும். இதற்கு முன்பாக, 80 கி.மீ. சுற்றளவு ரேடார் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

    நிலத்தில் பயன்படுத்தக் கூடிய வகையில், ‘அதுல்யா’ என்ற ஏர் டிபன்ஸ் பையர் கன்ட்ரோல் ரேடார் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரேடாரின் சிறப்பு என்னவென்றால், 20 கி.மீ. சுற்றளவில், எந்த திசையிலிருந்து எதிர்வரும் தாக்குதல்கள் அனைத்தையும், துப்பாக்கியால் ஒரே முறையில் தகர்க்கும் திறன் பெற்றது. இதே போல, ஏர்போர்ன் சர்வைலன்ஸ் சிஸ்டம், பீரங்கி, அர்ஜூன் எம்.பி.டி. உட்பட பல்வேறு புதிய தயாரிப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    கண்காட்சி மற்றும் ரேடார் குறித்து, டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி ஒருவர் கூறுகையில்,
    ‘ஆருத்ரா’ என்ற ‘மீடியம் பவர் ரேடார்’ மாதிரி, காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனைகளை விரைவில் முடித்து, தயாரிப்பு ஆணைகளை பெற உள்ளோம். இதே போல, 1,500 கி.மீ., சுற்றளவில் இருந்து வரும் தாக்குதல்களையும் கண்டறியும், அதி நவீன ரேடார் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் தயாரிப்பு பணிகள் முடிந்து, சோதனை ஓட்டம் நடைபெறும். அரங்கில் வைக்கப்பட்டுள்ள அனைத்து வகை தளவாட மாதிரிகளும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்று டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி கூறினார்.

    அசத்திய குஜராத் டைட்டன்ஸ்; ஆரவாரமில்லாமல் நடந்த இறுதிப்போட்டி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....