Wednesday, May 1, 2024
மேலும்
    Homeஅறிவியல்"கடவுள் துகள்" கண்டறியப்பட்டு பத்தாண்டுகள் நிறைவு

    “கடவுள் துகள்” கண்டறியப்பட்டு பத்தாண்டுகள் நிறைவு

    கடவுள் துகள்கள் எனப்படும் ‘ஹிக்ஸ் போசான்’  துகள்களின் இருப்பு, அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த ஆண்டுடன் பத்தாண்டுகள் முடிவடைகிறது. 

    இந்தப் பேரண்டம் உருவாகக் காரணம் என்று பெரும்பான்மையான அறிவியலாளர்களால் நம்பப்படுவது, பெரு வெடிப்பு கொள்கை. ( Big Bang Theory). இந்த கொள்கையின் படி வெடிப்பின்போது, சிதறிய துகள்கள் (particle) அதிகமான வேகத்தில் வெவ்வேறு திசைகளில் சிதறின. இந்தச் சிதறிய துகள்களுக்கு நிறை கிடையாது. 

    நிறை இல்லாத, இந்தச் சிதறிய துகள்கள் ஓர் ஆற்றல் புலத்தில் இணையும்போது, இக்கூறுகள் நிறை பெற்றுவிடுகின்றன. நிறை பெற உதவும் அந்த ஆற்றல் புலமானது, ஹிக்ஸ் புலம் என்றழைக்கப்படுகிறது. 

    சிதறிய துகள்கள் நிறை பெறும் விவரத்தினை முதன் முதலில் கண்டறிந்து, அதெற்கென ‘த ஆர்ஜின் ஆஃப் மாஸ்’ ( the origin of mass) எனும் ஆய்வறிக்கையை உருவாக்கியவர், பீட்டர் ஹிக்ஸ். அதனாலேயே, துகள்கள் நிறை பெறும் ஆற்றல் புலத்துக்கு ஹிக்ஸ் புலம் என்று பெயர் வைக்கப்பட்டது. 

    ஹிக்ஸ் புலத்தில் இருந்தபடியே, மற்ற பொருட்கள் அனைத்துக்கும் நிறையை வழங்கக்கூடியத் துகள்கள் ‘ஹிக்ஸ் போசான்’ துகள்கள் என்று அழைக்கப்படுகிறது. 

    1960-களில் பீட்டர் ஹிக்ஸ் எழுதிய ஆய்வறிக்கைக்கு பெரிய வரவேற்பு இல்லை. காரணம், பீட்டர் ஹிக்ஸ் இத்துகள் பற்றி அனுமானமாக மட்டுமே முன்வைத்தார். இருப்பினும், ஹிக்ஸ் வெளியிட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில், அந்தத் துகள்கள் குறித்த ஆராய்ச்சியானது தொடர்ந்த வண்ணம் இருந்தது.

    நீண்ட காலமாக தொடர்ந்த இந்த ஆராய்ச்சிக்கு 2012-ம் ஆண்டு பதில் கிடைத்தது. பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையத்தில் இதற்கான ஆராய்ச்சி நடைபெற்றது. அங்கு, பூமிக்கு அடியில் அமைத்துள்ள ‘லார்ஜ் ஹேட்ரான் கொலைடர்’ (Large Hadron Collider) எனும் உலகின் மிகப்பெரிய மற்றும் உலகிலேயே மிகவும் அதிக திறன் மிக்க துகள் முடுக்கி (Particle Accelerator) மூலம் செய்யப்பட்ட சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

    ‘ஹிக்ஸ் போசான்கள்’ கடவுள் துகள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கடவுள் துகள் என்ற பெயர் பயன்பாட்டுக்கு வர காரணம் ஒரு எழுத்தாளர். ஆம், இயற்பியலுக்காக 1982-ம் ஆண்டு நோபல் பரிசை வென்ற லியோன் மேக்ஸ் என்பவர், எழுத்தாளர் டிக் தெரேசி என்பவருடன் இணைந்து ‘ஹிக்ஸ் போசான்கள்’ குறித்து புத்தகம் ஒன்றை எழுதினார்.  

    இந்தப் புத்தகத்துக்கு ‘தி காட் ஆஃப் பார்டிக்கல்’ (கடவுளின் துகள்) என்று பெயரிடப்பட்டது. மிகவும் பிரபலமடைந்த இந்தப் புத்தகத்தினால்தான் கடவுளின் துகள் என்ற வார்த்தை பலரிடத்திலும் பரவியது குறிப்பிடத்தக்கது. 

    ‘பத்தல பத்தல’ கமல்ஹாசனின் இந்த ‘சாகாத’ முகம் உங்களுக்குத் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....