Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபுலி டிசைனுடன் நமீபியா பறந்த சிறப்பு விமானம்.. 8 சிறுத்தைகளை வரவேற்க பிரமாண்ட நிகழ்ச்சி

    புலி டிசைனுடன் நமீபியா பறந்த சிறப்பு விமானம்.. 8 சிறுத்தைகளை வரவேற்க பிரமாண்ட நிகழ்ச்சி

    நபியாவிலிருந்து இந்தியா வரும் சீட்டாக்களுக்கு இடையில் எந்த உணவும் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் முற்காலத்தில் சீட்டாக்கள் அதிகளவில் இருந்தன. அதன் பின்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்சி செய்த மன்னர்கள், ஆங்கிலயேர்கள் உள்ளிட்டோர் பொழுது போக்கிற்காக சீட்டாக்களை வேட்டையாடி வந்தனர். 

    இதன் காரணமாக, ஒரு கட்டத்தில் இந்த சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்தியாவில் கடைசியாக 1947 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்படாத மாநிலமாக இருந்த சத்தீஸ்கரில் ஒரு சீட்டா கண்டறியப்பட்டது. அதன்பின்பு, 1952 ஆம் ஆண்டு சீட்டாகள் நாட்டின் எந்த பகுதிகளிலும் இல்லை என அறிவிப்பு வெளியானது. 

    அப்போதிலிருந்து இப்போது வரை, இந்தியாவில் எங்கும் சீட்டாக்கள் இல்லை. இதன் காரணமாக சீட்டாக்களை வாங்குவதற்கு நமீபியாவிடம் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

    இந்த ஒப்பந்தத்தின்படி, நமீபியாவிலிருந்து இந்தியாவுக்கு 5 ஆண் சீட்டாக்கள் மற்றும் 3 பெண் சீட்டாக்கள் கொண்டுவரப்பட உள்ளன. இப்படி செய்வதால் இந்திய நாட்டில் சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு, அதிகமான சீட்டாக்கள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: இந்திய அளவில் வண்டலூருக்கு கிடைத்த அங்கீகாரம்.. தமிழக மக்களே குஷிதானே?

    இந்நிலையில், நாளை (செப்டம்பர் 17) நபியாவிலிருந்து வரும் சீட்டாக்கள் முதலில் ராஜஸ்தான் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டுவரப்பட உள்ளது. பிறகு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்கு இந்த 8 சீட்டாக்களும் அழைத்துவரப்பட உள்ளன. 

    இந்த விமான பயணத்தின் போது சிறுத்தைகள் கழிக்கும் நேரம் முழுவதும் அவை வெறும் வயிற்றுடன் இருக்க வேண்டும். மேலும் நீண்ட நேர பயணம் விலங்குகளுக்கு குமட்டல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தி மற்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதால், இதுபோன்ற முன்னெச்சரிக்கை தேவை என வனத்துறை மூத்த அதிகாரிகள் சவுகான் தெரிவித்துள்ளார்.  

    இதன்காரணமாக, அங்கிருந்து வரும் சீட்டாக்களுக்கு விமான பயணத்தின் போது உணவு வழங்கப்படாது. நபியாவிலிருந்து உணவை சாப்பிட்டு வரும் சீட்டாக்கள் அதன் பிறகு, குனோ-பால்பூர் தேசிய பூங்காவிற்கு வந்து மட்டுமே உணவு உண்ணும்.

    மேலும், பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி இந்தியக் காடுகளில் சீட்டாக்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை அவரே தொடங்கி வைக்க உள்ளார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....