Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை; முன்னேறிய தென் கொரியா..வெளியேறிய கானா, உருகுவே

    கால்பந்து உலகக் கோப்பை; முன்னேறிய தென் கொரியா..வெளியேறிய கானா, உருகுவே

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் கானா, உருகுவே இரு அணிகளுமே உலகக் கோப்பையை விட்டு வெளியேறின. 

    கத்தாரில் நடைபெற்று வரும் நடப்பாண்டிற்கான உலகக் கோப்பை போட்டி அடுத்தக் கட்டத்தை எட்டிவருகிறது. நாக்-அவுட் சுற்று விரைவில் தொடங்கவுள்ள நிலையில், லீக் சுற்றுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 

    நேற்று நடைபெற்ற போட்டியில் நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன. இவற்றுள் எச் பிரிவில் இடம்பெற்றுள்ள தென் கொரியா மற்றும் போர்ச்சுகல், கானா மற்றும் உருகுவே ஆகிய அணிகளுக்கு இடையேயான ஆட்டங்கள் நடைபற்றது. 

    தென் கொரியா மற்றும் போர்ச்சுகல்

    இந்த ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ஹார்டா ஒருகோல் அடித்து தனது அணியை முன்னிலை படுத்தினார். இதைத்தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிக்க, முனைப்பு காட்டிய நிலையில், ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் கிம் ஒருகோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். 

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 90+1 கூடுதல் நேர ஆட்டத்தில் தென்கொரிய வீரர் ஹவாங் ஒருகோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

    இதன் மூலம் போர்ச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணி வீழ்த்தியது. மேலும், இந்த வெற்றியின் மூலம் தென் கொரிய அணி அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றது.

    கானா மற்றும் உருகுவே

    இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே உருகுவே அணியின் ஆட்டம் மேலோங்கியிருந்தது. இதில் முதல்பாதி ஆட்டத்தின் 26 மற்றும் 32-ஆவது நிமிடங்களில் உருகுவே வீரர் டி அராஸ்சீட்டா இரண்டு கோல்கள் அடித்து தனது அணி வெற்றிப்பெற அடித்தளமானார். 

    ஆனால், இந்த வெற்றி உருகுவேக்கு அடுத்தச்சுற்றுக்கு செல்ல பயனளிக்கவில்லை. கானா, உருகுவே இரு அணிகளுமே உலகக் கோப்பையை விட்டு வெளியேறின. 

    குள்ளநரி கூட்டம் படத்தில் நடித்த துணை நடிகர் காலமானார்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....