Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்திமுக துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி ? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என தகவல்

    திமுக துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி ? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என தகவல்

    திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    திமுக-வின் உட்கட்சித் தேர்தல் 99 சதவீதம் முடிந்துவிட்டது. இனி, திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 

    இந்நிலையில், இன்று திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

    மேலும், தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, வரும் 9-ம் தேதி நடக்கவிருக்கும் திமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நியமனம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: செய்யாத தவறுக்கு பணியிட மாற்றமா? இது அநீதி; மருத்துவர்களுக்கு ஆதரவாக அன்புமணி கண்டனம்

    திமுகவின் சட்டவிதியின்படி ஒரு பெண் உள்பட 5 துணை பொதுச்செயலாளர்கள் செயல்படலாம். தற்போதைய நிலவரத்தின்படி,தற்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா ஆகியோர் துணை பொதுச்செயலாளர்களாக உள்ளனர். 

    மேலும், செப்டம்பர் 20-ல் துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் செப்டம்பர் 20-ல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அந்த பதவி காலியானது. 

    இந்நிலையில், திமுகவில் பெண்களுக்கான பிரதிநிதித்துவ அடிப்படையில் துணை பொதுச்செயலாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் நடைபெற இருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....