Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்விறுவிறுப்பை எட்டும் திமுக உட்கட்சி தேர்தல்...வேட்புமனுவை தாக்கல் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

    விறுவிறுப்பை எட்டும் திமுக உட்கட்சி தேர்தல்…வேட்புமனுவை தாக்கல் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

    திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    திமுக-வின் உட்கட்சித் தேர்தல் 99 சதவீதம் முடிந்துவிட்டது. இனி, திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. 

    தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு, வரும் 9-ம் தேதி நடக்கவிருக்கும் திமுகவின் பொதுக்குழு, செயற்குழுவில் ஒப்புதல் பெறப்படும். அதன் பிறகு, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நியமனம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க:திமுக துணை பொதுச்செயலாளர் ஆகிறாரா கனிமொழி ? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என தகவல்

    இந்நிலையில், திமுக தலைவர் தேர்தலில் போட்டியிட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வேட்புமனுவை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    இதேபோன்று, பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

    திமுகவை பொறுத்தவரையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த பிறகு திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். மேலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....