Saturday, March 16, 2024
மேலும்
    Homeஜோதிடம்தீபாவளிக்கு மறுநாளே சூரிய கிரகணம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்..

    தீபாவளிக்கு மறுநாளே சூரிய கிரகணம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்..

    இந்த 2022 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் தீபாவளி மறுநாளான அக்டோபர் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

    இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25 மதியம் 2.29 மணிக்கு துலாம் ராசியில் நிகழ்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது சூரியனின் ஒளி பூமியை அடையாத நிலை உருவாகும். இது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 

    இந்தமுறை சூரிய கிரகணத்தில் முக்கிய கிரகங்களான சுக்கிரன், கேது ஆகிய இரண்டும் ஏற்கனவே துலாம் ராசியில் உள்ளன. இதனால் புதிய யோகம் ஒன்று உருவாகும். மேலும் இதன் மீது சனியின் பார்வைபடுவதால், சில ராசிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அவை பின்னவருமாறு;

    மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்தச் சூரிய கிரகணம் பாதிப்பை ஏற்படுத்தலாம். வேலை மற்றும் வியாபாரத்தில் மிக கவனமாக செயல்பட வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. அதேவேளை உங்கள் உடல் நலத்தில் அதீத கவனம் எடுத்து கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது. 

    துலாம்: துலாம் ராசிக்காரர்களே இந்தச் சூரிய கிரகணம் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவாது. இந்த ராசியில் சதுரகிரி யோகம் தொடங்குவதால் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பண விஷயத்தில் கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. பயணம் மேற்கொள்ளும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

    மிதுனம்: மிதுன ராசிக்காரர்களே இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு அசுப பலன்களைத் தரும். திருமண காரியங்களில் முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சோமூகமாக வழி நடத்திச் செல்வது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் தேவை. 

    பொதுவாக அனைத்து ராசிக்காரர்களுமே அவர்களின் இஷ்ட தெய்வத்தை நினைத்து வழிபாடு செய்வது நல்லது. நம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. 

    இதையும் படிங்க: ஜெயலலிதாவிற்கு ‘ஆஞ்சியோ’ செய்யாததற்கான காரணம் இதுதானா? குற்றச்சாட்டுகளுக்கு பதில் தந்த சசிகலா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....