Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்சிவகார்த்திகேயனின் அடுத்த பயணம் இன்றே இனிதே தொடங்கியது!

    சிவகார்த்திகேயனின் அடுத்த பயணம் இன்றே இனிதே தொடங்கியது!

    சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நட்சத்திரங்களின் பட்டியலில் மிக முக்கியமானவராக உள்ளார். இவரது நடிப்பில் மார்ச் மாதம் 25 ஆம் தேதி டான் திரைப்படம் வெளியாக உள்ளது. 

    நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்து இறுதியாய் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. டாக்டர் திரைப்படம் தந்த வெற்றி, சிவகார்த்திகேயனை மேன்மேலும் உயரத்திற்கு கொண்டுச்சென்று வைத்துள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டும் தமிழகம் மட்டும் அல்லாது பிற மாநிலங்களிலும் விரிவடைந்துள்ளது.

    தமிழகத்தில் தனது மார்க்கெட்டை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன், தற்போது தெலுங்கு திரையுலகிலும் தனது மார்க்கெட்டை விரிவடையச் செய்ய உள்ளார். 

    அதன்படி, தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த ஜதிரத்னாலு திரைப்படத்தை இயக்கிய அனுதீப் அவர்களின் இயக்கத்தில்  சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று முன்பே அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் தயாரக உள்ளது. தற்காலிகமாக இத்திரைப்படத்திற்கு SK20 என பெயர்சூட்டப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்வில் புதிய பயணமாக பார்க்கப்படுகிறது. 

    sivakarthikeyan next film

    சிவகார்த்திகேயனின் 20 வது திரைப்படமாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினமாஸுடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று காரைக்காலில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. SK20-யில் சத்யராஜ், நவீன் பாலிஷெட்டி மற்றும் பிரேம்ஜி அமரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமன் அவர்கள் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  

    beast single

    தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் எழுதியுள்ள பாடல் வருகின்ற பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அப்பாடலுக்கான புரோமோவில் சிவகார்த்திகேயன், பீஸ்ட் திரைப்பட இயக்குனர் நெல்சன் தீலிப்குமார், இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் தளபதி விஜய் அவர்கள் இணைந்து அலப்பறைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....