Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்உச்சம் தொடும் தளபதி விஜய்யின் இயக்குனர்!

    உச்சம் தொடும் தளபதி விஜய்யின் இயக்குனர்!

    தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் திரைப்படம்தான், பீஸ்ட்! அனிரூத் இசையமைக்க இத்திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா அவர்கள் ஒளிப்பதிவு செய்கிறார். தளபதி விஜய் உடன் இத்திரைப்படத்தில் புகழ்பெற்ற தமிழ் இயக்குனர் செல்வராகவன் அவர்களும் நடிக்கிறார். விஜய் இரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்ப்பாரப்பை ஏற்படுத்தியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் அவர்கள் இயக்கியுள்ளார். 

    beast_1

    பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்தான ப்ரோமோ வெளியாகி தென்னிந்திய திரையுலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்று வருகிறது. வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் அவர்கள் எழுத, பாடல் குறித்தான தகவல்கள், வார்த்தைகள் என அனைத்தும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

    beast single

    கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தனது மூன்றாவது திரைப்படத்திலேயே விஜய் அவர்களை இயக்குகிறார்.

    இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை சரிவர புரிந்து அதற்கேற்ப கதைகளை அமைத்து, அதன்பின் நிகழக்கூடிய திரைக்கதை பின்னலில் வித்தியாசமான முயற்சிகளை செய்து, அம்முயற்சியில் வெற்றியும் கண்ட நெல்சன் திலீப்குமார் தளபதி விஜய் அவர்களை இயக்கியதற்கே இன்று வரை தமிழ் திரையுலகம் வியப்பில்தான் இருக்கிறது.

    vijay

    இந்த வியப்பின் விந்தை போகும் முன்னரே, இன்னொரு வியப்பையும் தரவிருக்கிறார், நெல்சன் திலீப்குமார். ஆம்! தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அவர்களை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன்மூலம் ரஜினிகாந்த் அவர்களின் 169 வது திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்று அறியப்படுகிறது. விரைவில்  இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

    rajinikanth

    கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சன் திலீப்குமார் மற்றும் ரஜினிகாந்த் இணையவிருக்கும் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாய் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தையும், தற்போது தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் பீஸ்ட் திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருப்பது குறி்ப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....