Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்இன்று மாலை அஜித் ரசிகர்களுக்கு இன்ப செய்தி காத்திருக்கிறது!

    இன்று மாலை அஜித் ரசிகர்களுக்கு இன்ப செய்தி காத்திருக்கிறது!

    கொரோனாவின் உருமாற்றமான, ஒமிக்ரான் காரணமாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக இருந்த வலிமை திரைப்படம் தள்ளிப்போனது. அதன் பின்பு திரைப்படம் எப்போது ரீலிஸ் என்று கேள்விகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தன. இப்படியான சூழலில்தான், வலிமை திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.

    valimai update

    இந்நிலையில், இன்று வலிமை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளது. ஆம்! தமிழில் ஏற்கனவே வெளியாகியிருந்த வலிமை திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது.

    valimai kannada valimai hindi valimai telugu

    தெலுங்கு ட்ரைலரை பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அவர்களும், கன்னட ட்ரைலரை நான் ஈ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கிச்சா சுதீப் அவர்களும், ஹிந்தி ட்ரைலரை அஜய் தேவ்கன் அவர்களும் வெளியிட உள்ளனர்.

    வலிமை ட்ரைலர் தமிழில் வெளியான போதே பலரின் விருப்பத்தையும் பெற்றது. பலருக்கும் பிடித்தமான ஒன்றாய் மாறிப்போனது. வலிமை ட்ரைலர் யூடியூபில் பல சாதனைகளை நிகழ்த்தியது. இந்நிலையில் இன்று பிற மொழிகளில் வெளியாக இருக்கும் வலிமை ட்ரைலர் என்ன என்ன சாதனைகளை படைக்கும் என்று பலரும் காத்திருக்கின்றனர். தற்போதே சமூகவலைத்தளங்களில் வலிமை ட்ரைலர் என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் உள்ளது.

    valimai

    ஏற்கனவே, வலிமை திரைப்படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அஜித் ரசிகர்களிடம் மட்டும் அல்லாது பொதுமக்களையும் கவர்ந்தது. குறிப்பாக வலிமை மேக்கிங் வீடியோவில் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளை படம்பிடித்த விதத்தையும் அதனூடே கொரோனாவினால் ஏற்பட்ட தடங்களையும் அதன் பின்பு அஜித் ரசிகர்கள் வலிமைக்காக கொடுத்த அரவணைப்பையும் காட்சிப்படுத்தியது பலரையும் உணர்ச்சிவசத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....