Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சருடன் ஆட்சியர் விளையாடிய 'பல்லாங்குழி'! பூலாங்குறிச்சி விழாவில் நடந்த ருசிகரம்

    அமைச்சருடன் ஆட்சியர் விளையாடிய ‘பல்லாங்குழி’! பூலாங்குறிச்சி விழாவில் நடந்த ருசிகரம்

    சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் செட்டிநாடு இல்ல நூற்றாண்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களில் புகழ்பெற்ற ஒன்றுதான் பூலாங்குறிச்சி செட்டி நாடு ‘லட்சுமி விலாஸ்’ பங்களா. இந்த பங்களாவிற்கு தற்போது வயது நூறாண்டுகள் ஆகிறது. இதையொட்டி, அந்த ‘லட்சுமி விலாஸ்’ பங்களாவிற்கு அக்குடும்பத்தினர் நூற்றாண்டு விழா கொண்டாடினர். 

    இந்த விழாவில், ‘லட்சுமி விலாஸ்’ இல்லத்தை நிர்வகிக்கும் சோனா குடும்பத்தின் தலைவர் வள்ளியப்பன் தலைமை வகித்தார். வி.டெக்னாலஜிஸ் நிர்வாக இயக்குநர் சொக்கு வள்ளியப்பா முன்னிலை வகித்தார். 

    மேலும், இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு செட்டிநாடு இல்லத்தில் நூற்றாண்டு விழா நிறைவைக் குறிக்கும் வகையில் இல்லத்தின் முன்பாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 

    இதுமட்டுமல்லாது, பாரம்பரிய விளையாட்டை நினைவுபடுத்தும் வகையில் அமைச்சரும், ஆட்சியரும் பல்லாங்குழி விளையாடினர். இது அங்கிருந்தோர்களை கவர்ந்தது. லட்சுமி விலாஸ் என்றழைக்கப்படும் பூலாங்குறிச்சி செட்டியாடு இல்லத்தை எம்.சுப்பிரமணியன் என்பவரால் கடந்த 1922-ல் கட்டப்பட்டது.  இந்த 2 அடுக்கு வீட்டில் 50 அறைகள், திருமண அரங்கம் போன்றவை உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: ‘நம்மை நோக்கி வரும் சக்கரம்’ மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சூசக எச்சரிக்கை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....