Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'பகாசூரன்' திரைப்படத்தில் இருந்து பக்திமயமாக வெளிவந்த ‘சிவ சிவாயம்’ பாடல்!

    ‘பகாசூரன்’ திரைப்படத்தில் இருந்து பக்திமயமாக வெளிவந்த ‘சிவ சிவாயம்’ பாடல்!

    செல்வராகவன் நடிப்பில் இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகாசூரன்’ திரைப்படத்தில் இருந்து ‘சிவ சிவாயம்’ பாடல் வெளியாகியுள்ளது.

    ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது இயக்குநர் செல்வராகவனை வைத்து ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    நடிகர் நடராஜ், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசைமையத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் டீசர் வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து, ‘பகாசூரன்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதத்தில் வெளியாகும் எனப் படக்குழு காணொலி வாயிலாக தெரிவித்தது. இந்நிலையில்,  ‘பகாசூரன்’ திரைப்படத்தில் இருந்து ‘ சிவ சிவாயம்’ எனும் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

    இப்பாடலை, திரைப்படத்தின் இசையமைப்பாளர் சாம் சி. எஸ் பாடியுள்ளார். மேலும், இப்பாடலின் வரிகள் மறைந்த பாபநாசம் சிவன் அவர்களின் வரியிலிருந்தும், திருவாசகம் பாடல் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: 19 வருடங்களுக்கு பிறகு வியந்த ஹாரிஸ் ஜெயராஜ்…. நா.முத்துகுமார் செய்த சம்பவம் அப்படி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....