Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்தீரன் பட பாணியில் பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் - கெத்து காட்டிய காவல்துறை

    தீரன் பட பாணியில் பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் – கெத்து காட்டிய காவல்துறை

    நீதிமன்றத்தில் ஆஜராகாமல், ராஜஸ்தானில் தலைமறைவாக இருந்துவந்த குற்றவாளிகளை காவல்துறையினர் தீரன் பட பாணியில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிகழ்வு பாராட்டை பெற்றுள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரை சார்ந்தவர் தன்ராஜ் சௌத்திரி. இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அடகு கடையும், தங்க நகை மொத்த வியாபாரமும் செய்து வந்துள்ளார்.

    இதற்கிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் ஆகியோரை கட்டிபோட்டு விட்டு தன்ராஜ் மனைவி மற்றும் மகனை கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.

    இதையும் படிங்க : பார்வையை இழக்கப் போகும் பிள்ளைகள் – சொத்தையே இழந்து பெற்றோர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

    இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணீஷ், மஹிபாலசிங், ரமேஷ் படேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் மஹிபால் சிங் போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் என்கவுண்டர் செய்யப்பட்டார். மீதம் உள்ள இருவர் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை கொள்ளை வழக்கானது மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்ட இருவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளனர். எனவே பிணையை ரத்து செய்த நீதிபதி கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து ராஜஸ்தான் சென்று குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த கைதானது தீரன் பட பாணியில் நடந்ததாக பத்திரிகையாளர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....