Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரபல பாடகிக்கு மூளையில் ரத்தக் கசிவா? - வெளிவந்த தகவல்களால் அதிர்ச்சி..

    பிரபல பாடகிக்கு மூளையில் ரத்தக் கசிவா? – வெளிவந்த தகவல்களால் அதிர்ச்சி..

    பிரபல பாடகி பாம்பே ஜெயஶ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் கோமா நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தென்னிந்தியாவின் முக்கிய பாடகியாக திகழ்ந்து வருபவர் பாம்பே ஜெயஶ்ரீ. கர்நாடக இசைக்கலைஞரான இவர் தென்னிந்திய அளவில் பல்வேறு திரைப்படங்களில் பாடியுள்ளார். தமிழில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இவர் பாடிய தமிழ்ப் பாடல்களுக்கு தனி ரசிக கூட்டம் உள்ளது. 

    கர்நாடக இசை உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் சென்னை மீயூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி விருது இவருக்கு சமீபத்தில் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு கலைஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

    இதைத்தொடர்ந்து, இங்கிலாந்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொள்ள பாம்பே ஜெயஶ்ரீ சென்றிருந்தார். இன்று மாலை அவரது இசை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்த நிலையில் அவர் திடீரென மயங்கியுள்ளார். மேலும், சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஶ்ரீ-க்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் கோமா நிலையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அவருடைய உடல்நிலை சற்று ஆபத்தான நிலையில் உள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளதால் இசையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகம் நிலவி வருகிறது. 

    செயற்கையாக சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை முடித்த வடகொரியா..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....