Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'GPay' நம்பர் கொடுங்க ? எலான் மஸ்க்கை 'வச்சு செஞ்ச' சிபி சத்யராஜ் - வைரல்...

    ‘GPay’ நம்பர் கொடுங்க ? எலான் மஸ்க்கை ‘வச்சு செஞ்ச’ சிபி சத்யராஜ் – வைரல் ட்விட்

    எலான் மஸ்க்கின் ட்விட்டிற்கு, நடிகர் சிபி சத்யராஜ் அளித்த பதில் ட்விட் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. 

    ட்விட்டர் குறித்த பேச்சுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரியதாய் உருவெடுத்துள்ளது. இதற்கு முழு முக்கிய காரணம் எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியிருப்பதே. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக பதவியேற்ற பிறகு, ட்விட்டரில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 

    தற்போது, ட்விட்டரை பொறுத்தவரையில், ப்ளூ டிக் விவகாரம்தான் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ட்விட்டரில் பயனர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதும், அதிகார கணக்கு என்று சொல்லப்படுவதற்கும் இந்த ‘ப்ளூ டிக்’ உபயோகப்படுகிறது. 

    இந்நிலையில், இந்த ப்ளூ டிக்கிற்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளிவந்தது. முதலில், இதற்காக மாதந்தோறும் ரூ.1600 வசூலிக்கப்படும் என்று தகவல்கள் வெளிவந்தது. 

    இதைத்தொடர்ந்து, 8 அமெரிக்க டாலர்கள் (ரூ.660) வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருப்பினும் இந்த வசூலிற்கு ட்விட்டர் பயனர்கள் கடும் கண்டனத்தையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இச்சூழிலில், எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருங்கள்…ஆனால், எட்டு அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

    எலான் மஸ்க்கின் இந்த பதிவிற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தமிழ் திரையுலக நடிகர் சிபி சத்யராஜ் எலான் மஸ்க்கின் பதிவிற்கு ‘ தயவுசெய்து உங்களின் கூகுள் பே நம்பரை அனுப்புங்கள்’ என பதில் ட்விட் செய்துள்ளார். சிபி சத்யராஜின் இந்த செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த ட்விட் காண்போரை சிரிப்பில் ஆழ்த்தி வருகிறது. 

    வெளிவந்த அவதார் திரைப்படத்தின் டிரெய்லர்; வியப்பில் ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....