Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா"ஷ்ரத்தாவை போல உன்னையும் 70 துண்டுகளாக வெட்டி விடுவேன்"; மிரட்டிய காதலன்

    “ஷ்ரத்தாவை போல உன்னையும் 70 துண்டுகளாக வெட்டி விடுவேன்”; மிரட்டிய காதலன்

    “ஷ்ரத்தாவை 35 துன்டுகளாக வெட்டியது போல உன்னையும் 70 துண்டுகளாக வெட்டி விடுவேன்” என தன்னுடன் லிவ்வின்னில் வாழ்ந்த பெண்ணை நபர் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மராட்டிய மாநிலம், துலே என்ற பகுதியைச் சேர்ந்தவர் அர்ஷத் சலீம் மாலிக் என்பவர். இவர் கடந்த ஜூலை மாதம் முதல் ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல், சேர்ந்து வாழ்ந்து வந்தார். அந்தப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. அவரது கணவர் விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

    அந்தச் சமயம் பார்த்து, இந்த அர்ஷத் மாலிக் அந்தப்பெண்ணிடம் நெருங்கி பேசி, அப்பெண்ணிடம் தன்னை, ஹர்ஷல் மாலி என அறிமுகப்படுத்திக் கொண்டார். பிறகு இருவரும் துலே காட்டுப்பகுதிக்கு சுற்றிப்பார்க்க சென்றபோது அர்ஷத் மாலிக் அப்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளார். 

    பிறகு இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதற்கு ஒப்பந்தம் தயாரிப்பதற்காக அமல்னர் என்ற கிராமத்திற்கு சென்றபோது தான் தெரியவந்தது ஹர்ஷலின் உண்மையான பெயர் அர்ஷத் என. இருப்பினும் அந்தப்பெண் அவருடன் சேர்ந்து வாழ முடிவு செய்து, ஓஸ்மானாபாத்தில் ஒரு வீடு எடுத்து தங்கினர். 

    அப்போது அர்ஷத் அப்பெண்ணை மதம் மாறும்படி தொந்தரவு செய்து வந்தார். மேலும் சிறிய குழந்தையையும் மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக அந்தப் பெண் காவல்துறையில் புகார் அளித்தார்.

    மேலும் அப்படி மதம் மாறவில்லை என்றால், தில்லியில் ஷ்ரத்தாவை 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்ததுபோல் உன்னையும் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன் என அர்ஷத் மிரட்டியதாகவும் அப்பெண் புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

    இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   

    பரங்கிமலை ரயில் நிலையத்தில் புது திட்டம்; வெளிவந்த தகவல்கள்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....