Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅப்தாப்பிடம் உண்மைக் கண்டறியும் நார்கோ சோதனை முடிவு; உண்மைகள் வெளியாகுமா?

    அப்தாப்பிடம் உண்மைக் கண்டறியும் நார்கோ சோதனை முடிவு; உண்மைகள் வெளியாகுமா?

    தில்லியில் இளம் பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன் அப்தாப்பிடம் உண்மைக் கண்டறியும் நார்கோ சோதனை நடத்தப்பட்டது. 

    மராட்டிய மாநிலம், மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற இளம்பெண் தனது காதலனான அப்தாப் அமீன் பூனாவாலாவுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தில்லியில் லிவ்வின் முறையில் வசித்து வந்தார். இதனிடையே திடீரென காதலன் அப்தாப் பெண்ணை 35 துண்டுகளாக வெட்டி தில்லியின் பல பகுதிகளில் வீசினார். 

    இதையடுத்து ஷ்ரத்தாவின் தந்தை அளித்த புகாரின் பேரில், காதலன் அப்தாப் அமீன் பூனாவாலா கடந்த மாதம் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அவரிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் அப்தாப் முன்னுக்கு பின் முரணாக வாக்குமூலம் அளித்து வருவதால் அவரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. 

    மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அப்தாப்பிடம், உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த தில்லி காவல்துறை, நீதிமன்றத்தில் அனுமதி பெற்றது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு குற்றவாளியிடம் உண்மைக் கண்டறியும் சோதனையான பாலிகிராப் நடத்தப்பட்டது. அதில் , ஷ்ரதாவை கொலை செய்தது ஏன்? உள்ளிட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. 

    இதையடுத்து, அப்தாப்பிடம் நார்கோ சோதனையும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அவருக்கு நார்கோ சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனை முடிவுகளில் பல்வேறு உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    மேலும் அப்தாப்பிடம் உண்மைக் கண்டறியும் சோதனைகள் முடிவுற்றதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    யூடியூப் தளத்தில் சாதனை செய்த விஜய்யின் ‘ரஞ்சிதமே’…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....